முகப்பு /செய்தி /உலகம் / உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. தொடர்ந்து 6 ஆண்டுகளாக பின்லாந்து முதலிடம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. தொடர்ந்து 6 ஆண்டுகளாக பின்லாந்து முதலிடம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Finland | உலகின் மகிழ்ச்சியாக நாடுகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

  • Last Updated :
  • intern, Indiafinlandfinlandfinland

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உலகின் மகிழ்ச்சியாக நாடுகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.2வது இடத்தில் டென்மார்க், 3வது இடத்தில் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 4வது, 5வது இடங்களில் இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து உள்ளன. இந்த பட்டியலில் ரஷ்யா 70வது இடத்தில் உள்ளது. இந்தியா 126வது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் கூட இந்தியாவுக்கு 7 இடங்கள் முன்னே உள்ளது. ஸ்ரீலங்கா பங்களாதேஷைவிட 5 இடங்கள் மேலே 112வது இடத்தில்   உள்ளது.    அமெரிக்கா 15வது இடத்திலும், போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைன் 92வது இடத்திலும் உள்ளது. தாலிபன்கன் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் 137வது இடத்திலும், இதுவே கடைசி இடம் மற்றும் மகிழ்ச்சியில்லாத நாடு என்று அறிக்கை கூறுகிறது.

top videos

    தொடர்ச்சியாக 11வது ஆண்டாக இந்த மகிழ்ச்சி நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆயுட்காலம், சிவில் உரிமைகளை கடைப்பிடித்தல், வேலை பாதுகாப்பு மற்றும் ஊழலின் அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

    First published:

    Tags: Happiness