கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் காரணமா அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி, சர்வதேச கடன் சுமை போன்றவை பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை வரலாறு காணத உயர்வை கண்ட நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலையும் விண்ணை முட்டியுள்ளது. அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர் போராட்டம், விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்காமல் அக்டோபர் வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது. இதற்கு இம்ரான் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் ஔரங்சேப்புடன் சேர்ந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் வரவில்லை.. அரிய நோயால் தவிக்கும் இளம் பெண்!
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் கடும் நிதி நெருகக்டியில் இருக்கிறது. எனவே, நிதி அமைச்சக்திடம் தேர்தல் நடத்த நிதியில்லை என்று தெரிவித்தார். நாட்டில் தினம்தோறும் பிரச்சனைகளை உருவாக்குவதையே இம்ரான் கான் வேலையாக வைத்துள்ளார் எனக் கூறிய அமைச்சர் கவாஜா, இந்த சிக்கல்களில் இருந்து பாகிஸ்தான் விரைவில் மீண்டு வரும் என் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan, Pakistan News in Tamil