காதலிக்கும் போது ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறுக் கொள்வதும், காதலர்களாக இருக்கும் வரையில் கணக்கு பார்க்காமல் செலவு செய்வதும் இயல்பானது தான். எப்போதுமே ஒரு ஆண் மட்டுமே தன் காதலிக்கு செலவு செய்கிறார் என்று முடிவு செய்ய முடியாது.
தன் காதலனுக்காக விலை உயர்ந்த பைக், செல்ஃபோன் போன்றவற்றை பரிசளிக்கும் பெண்களும் இருக்க தான் செய்கின்றனர். விஷயம் என்னவென்றால், காதலர்களில் யார் வசதியாக இருக்கிறார்களோ அல்லது அதிக பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் தங்களுடைய பார்ட்னருக்கு கண்ணை மூடிக் கொண்டு செலவு செய்வது வழக்கம் தான்.
சாதாரணமாக சினிமாவுக்கு செல்வது, ரெஸ்டாரண்டில் சாப்பிடுவது, புத்தாடை வாங்குவது என சிறிய அளவிலான செலவுகள் தொடங்கி, பைக், நகை, செல்ஃபோன் என காதலன்\ காதலியின் தேவை மற்றும் வசதியைப் பொறுத்து பரிசு பொருட்கள் மற்றும் செலவுகளின் அளவீடு மாறும். ஆனால், காதலில் விரிசல் வந்தால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தங்கள் காதலுக்காக செய்த செலவு வீண் தான். அதை நாம் மீட்க முடியாது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் முன்னாள் காதலியிடம் செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளது தான் தற்போதைய டிரெண்டிங் செய்தியாக உள்ளது. அடிலெய்ட் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர், அய்லே என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
தன் காதலன் விதித்த நிபந்தனை குறித்து டிக்டாக்கில் அய்லே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் அனுப்பியிருந்த நீண்ட பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். வாகனத்திற்கான எரிபொருள் செலவு, உணவு, தண்ணீர் செலவு மற்றும் சினிமா டிக்கெட் என ஒன்றுவிடாமல் அதில் அலெக்ஸ் பட்டியலிட்டுள்ளார்.
முன்னதாக காதலில் இருந்தபோது, அய்லே தன் பணத்தை எடுத்து செலவு செய்ய ஒருபோதும் அலெக்ஸ் அனுமதித்தது கிடையாதாம். காதலியின் மீது இருந்த பிரியத்தால் ஒவ்வொரு முறையும் அவரே பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் செய்த செலவுகளை உடனுக்குடன் குறிப்பெடுத்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இதையும் வாசிக்க: அம்மாடியோவ்.. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.19,000.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல?
ஆனால், காதலில் பிரிவு ஏற்பட்ட நிலையில் செய்த செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டு, பாதி பணத்தை அனுப்பி வைக்குமாறு அலெக்ஸ் கெடு விதித்துள்ளார். இந்தச் செய்தி இணைய உலகில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், இனி திருமண ஆல்பம் தேவைப்படாது என்று நினைத்தாராம். இதனால், ஃபோட்டோகிராஃபரிடம் அந்தப் பெண் பணத்தை திருப்பி கேட்ட விவகாரமும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News, Trending Video, Viral Video