முகப்பு /செய்தி /உலகம் / கிரிக்கெட் விளையாடிய பிரதமர் ரிஷி சுனக்.. அவுட் ஆக்கிய இங்கிலாந்து வீரர்கள்.. வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் விளையாடிய பிரதமர் ரிஷி சுனக்.. அவுட் ஆக்கிய இங்கிலாந்து வீரர்கள்.. வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் விளையாடிய ரிஷி சுனக்

கிரிக்கெட் விளையாடிய ரிஷி சுனக்

அவரது பேட்டிங் தேர்ந்த பேட்ஸ்மென் போலவே இருந்ததால் அவருடன் விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் வியப்படைந்தனர்.

  • Last Updated :
  • inter, IndiaEnglandEngland

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுடன் உற்சாகமாக மட்டையை சுழற்றி கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து வீரர்கள், வெற்றிக் கோப்பையுடன் ரிஷி சுனக்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த ரிஷி சுனக், அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இதனையடுத்து, பிரதமர் அலுவலகத் தோட்டத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் ரிஷி சுனக் கிரிக்கெட் விளையாடினார். சாம் கரன், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் வீசிய பந்துகளை திறம்பட விளையாடி அசத்தினார். அவரது பேட்டிங் தேர்ந்த பேட்ஸ்மென் போலவே இருந்ததால் வீரர்கள் வியப்படைந்தனர்.




 




View this post on Instagram





 

A post shared by Rishi Sunak (@rishisunakmp)



ஜோர்டன் வீசிய பந்தை எதிர்கொண்ட பிரதமர் ரிஷி சுனக், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு ரிஷி சுனக், பந்து வீசி விக்கெட்டுகளையும் எடுத்தார். இவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக பகிர்ந்தார் ரிஷி சுனக். இவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

First published:

Tags: Cricket, England, Rishi Sunak