முகப்பு /செய்தி /உலகம் / “திறமை இல்லாத பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை..” - எலான் மஸ்க் அதிரடி..!

“திறமை இல்லாத பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை..” - எலான் மஸ்க் அதிரடி..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

என்னுடைய தொழில் மேல் விருப்பமில்லாத பிள்ளைகளுக்கு நிறுவனத்தை ஒப்படைப்பதை விட நிர்வகிக்கத் தெரிந்த தகுதியானவர்களிடம் ஒப்படைப்பேன் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகப் பணக்காரர்களின் வரிசையில் எலான் மஸ்க் என்ற பெயர் மிகப் பிரபலம். மிகச்சாதரண குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு அரசாங்கம் செய்யக் கூடிய காரியங்களை தனி மனதனாக செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளார். ஆம், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை அனுப்புவது என்றால் சும்மாவா? அந்த வேலையைக் கூட இவரின் நிறுவனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இப்படி தன் திறமையால் மட்டுமே வளர்ந்தவர். ஒரு முறை இவரது சில ட்விட்டர் பதிவுகளை நீக்கியது ட்விட்டர் நிறுவனம். அதற்காக பல லட்சம் கோடி கொடுத்து அந்த நிறுவனத்தையே விலைக்கு வாங்கியவர்.

இப்படி வைராக்கியம் நிறைந்தவரும் கூட. அதனால் தனது சொத்து விஷயத்திலும் மிக வைராக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்.  எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சொல்லப்போனால், பரம்பரை சொத்து என்பதே இல்லாமல், கோடீஸ்வரராக உயர்ந்தது மட்டுமல்லாமல், வெறும் 30 ஆண்டுகளில் உலகையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி காட்டியிருக்கிறார். இவ்வளவு பெரிய ஆளுமை கொண்டிருக்கும் எலான் மஸ்க், தனது சொத்துக்களும், நிறுவனங்களும் வாரிசுகள் என்ற அடிப்படையில் மட்டும் யாருக்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

எலான் மஸ்க்-விற்கு மகன்கள், மகள்கள் என்று 9 பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் முதல் மகனுக்கு 19 வயதாகிறது. கடைசி மகனுக்கு 3 வயதாகிறது. இவர்களில், டமியன் மஸ்க், காய் மஸ்க் இருவருக்கும் 18 வயது நெருங்கியதால், எலான் மஸ்க்கின் சொத்துக்களையும், பங்குகளையும் அவர்களின் பெயர்களில் மாற்ற அவரது நிதி ஆலோசகர்கள் பல முறை அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால், எலான் மஸ்க் காலம் தாழ்த்தியே வருகிறார்.

இந்நிலையில், வாரிசு என்ற அடிப்படையில் மட்டும் எனது பங்குகளை பிள்ளைகளுக்கு வழங்கப்போவது கிடையாது என்று ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் மஸ்க் கூறுகையில், எனது பிள்ளைகளுக்கு என்னுடைய சொத்துக்களையும், நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கான திறமை, தகுதி, ஆர்வம் இல்லாவிட்டால், அவர்களுக்கு எனது பங்குகளை வழங்கும் முடிவை நான் நிச்சயமாக எடுக்க மாட்டேன். ஏனென்றால், என்னை பொறுத்தவரையில் அதை தவறென்று நினைக்கிறேன்.

Also Read : அமைச்சரின் வீட்டிக்கு தீ வைப்பு... கலவரத்தால் மணிப்பூர் மக்கள் மீண்டும் அவதி..!

top videos

    என்னுடைய பிசினஸில் விருப்பமில்லாத, பிள்ளைகளுக்கு எனது நிறுவனத்தின் பங்குகளை கொடுப்பதைவிட அந்த நிறுவனங்களுக்குள் இருக்கும் தகுதியான நபர்களிடம் அவற்றை ஒப்படைப்பது நல்லது. எனது நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமைகளை கொண்ட நபர்களை நான் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Elon Musk, Twitter