முகப்பு /செய்தி /உலகம் / ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒருவர் உயிரிழப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒருவர் உயிரிழப்பு

ஜப்பான் நிலநடுக்கம்

ஜப்பான் நிலநடுக்கம்

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Last Updated :
  • inter, Indiajapanjapan

ஜப்பானின் மத்திய பகுதியான இஷிகவா மாகாணத்தில, நண்பகல் 2.42 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானின் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் வடமேற்கு பகுதியில், 12 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால், அச்சம் அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சில இடங்களில் நிலநடுக்கத்தால் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

top videos

    ஏணி மீது ஏறி இருந்த ஒருவர் நிலநடுக்கத்தின் போது கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் தற்சமயத்திற்கு இல்லை என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Earthquake, Japan, Tamil News