தென் அமெரிக்க நாடுகளான ஈக்வடார் மற்றும் பெரு எல்லை பகுதியை ஒட்டி நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈக்வடார் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான குயாயாஸ் பகுதியை மையம் கொண்டு ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளி என சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 66.4 கிமீ அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் காரணமாக ஈக்வடார் மற்றும் வடக்கு பெரு நாடுகளில் உள்ள வீடுகள், பள்ளிகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கடும் சேதங்களை கண்டுள்ளன. சுமார் 44 வீடுகள் தரைமட்டமானதாகவும், 90க்கும் மேற்பட்ட வசிப்பிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க பாதிப்பில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டில் 4 வயது சிறுமி உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் அப்பெர்டோ ஒடரோலா கூறியுள்ளார். ஈக்வடார் நாட்டில் தீவிர பாதிப்பானது ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து அமைச்சகங்களையும் மீட்பு பணியில் களமிறக்கி தேவையான உதவிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ஈக்வடார் அதிபர் குய்லெர்மோ லாசோ கூறியுள்ளார். புணரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெறும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டாகப் பிரியும் ஆப்பிரிக்க கண்டம்... புதிதாக உருவாகப்போகும் பெருங்கடல்... ஆராய்ச்சியாளர்கள் தகவல்..
சமீப நாட்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்க சம்பவங்கள் பதிவாகி வருவது மக்களை பீதிக்குள்ளாக்குகிறது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட கோர நிலநடுக்க பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சி மற்றும் கவலையில் ஆழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, Peru