முகப்பு /செய்தி /உலகம் / மெக்சிகோவில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து.. 39 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்

மெக்சிகோவில் அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து.. 39 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்

மெக்சிகோ தீ விபத்து

மெக்சிகோ தீ விபத்து

அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உடல் கருதி உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • international, IndiaMexico

மெக்சிகோவில் உள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 39 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அகதிகள் முகாம் முழுவதும் பரவியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும்போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படைவீரரக்ள் கைது செய்து தடுப்பு காவல் முகாம்களில் அடைத்து வைக்கின்றனர். அமெரிக்காவிடம் இருந்து உரிய அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அனுமதி கிடைக்காதவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

top videos

    இந்த நிலையில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உடல் கருதி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    First published:

    Tags: Mexico, Migrants, Tamil News, USA