ஒரு பக்கம் பணம் சம்பாதிக்க மக்கள் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பணத்தை செலவழிக்க வழி தெரியாமல் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
சில பணக்காரர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் நண்பர்களுடன் பார்ட்டி செய்வார்கள். நடுக்கடலில் மது அருந்துவது மட்டுமல்லாமல் சில ஆபாசமான விளையாட்டுக்களிலும் ஈடுபாடுவார்கள். அந்த வகையில் சில சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா என்ற பெயரில் இத்தாலியின் குரூசோ சொகுசு கப்பலில் இத்தகைய பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
இந்த பார்ட்டியில் பங்கு பெற ஜோடிகளுக்கு தனியாகவும், சிங்கிளாக வருவோருக்கு தனியாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யாருக்கும் பார்ட்டி என்ற பெயரில் நடக்கும் இத்தகைய செயல்கள் மீது சந்தேகம் வராத வகையில் பார்த்துக்கொள்கின்றனர்.
இதையும் படிக்க | பழங்குடியினர் கொடுத்த பச்சை திரவம் - சாகச வீரர் அடைந்த மாற்றம் - சுவாரசிய சம்பவம்
இந்த மாதிரி பார்ட்டிகளை ஏற்பாடு செய்யும் ஜான் காமௌ தெரிவித்ததாவது, ''கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நிர்வாணமாகவும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம்.அங்கே ஆடை அனுமதி இல்லை. இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஜோடியாக வருபவர்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.
70 சதவிகிதம் பேர் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள். இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு பிறகு ஜோடியாக வருவபவர்களுக்கு இடையே நிலவும் உறவு வலுவடைவதாக தெரிவித்தார். சலிப்பான அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய பார்ட்டிகள் சுவாரசியம் சேர்ப்பதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Party