பதினைந்தாம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளை தங்கள் வசத்தில் எடுத்துக்கொள்ள பல படையெடுப்புகளை நடத்திய நாடுகளின் பட்டியலில் போர்ச்சுக்கல்லும் ஒன்று. பழமைவாய்ந்த நாடு என்ற பெருமைமிக்க நாடான போர்த்துகல் தற்போது மிகவும் பாதுகாப்பான நாடு என்று பெயரையும் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் உலகிலேயே அதிக மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் நாடாகவும் போர்த்துகல் உள்ளது.
போர்த்துகல் நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டுக்கு சுமார் 52 லிட்டர் மது அருந்துகிறார்களாம். அதாவது வாரத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் மது அருந்துகிறார்கள். அந்நாட்டில் இன்னொரு விநோதமான அம்சமும் ஒன்று உள்ளது. அங்கு ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை. ஆனால், போதைப்பொருள் வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றம். இந்த சட்டம் 2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை வைத்திருப்பதும் குற்றப் பிரிவின் கீழ் வராது. இந்தச் சட்டத்தின் விளைவு என்னவென்றால், இன்றைய தேதியில், போதைப்பொருள் கையாளும் வழக்குகள் குறைவாகப் பதிவாகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் போர்த்துகலும் ஒன்று. இப்படி மது அருந்துவோர் இருந்தாலும், போதைப் பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்ற நிலை இருந்தாலும் போர்த்துகலில் குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
அதிகபட்ச குற்றத்திற்கே இங்கு 25 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நாட்டில் மரண தண்டனை என்பது கிடையாது. அதனால் உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் போர்த்துகலும் ஒன்றாகவுள்ளது. இது உலகின் வளர்ந்த நாடுகளுள் ஒன்றாகவும் உள்ளது. மேலும் இங்கு கல்வியறிவு விகிதம் 97 சதவீதமாக உள்ளது.
Also Read : இங்கிலாந்தில் 3-ம் சார்லஸ்க்கு முடிசூட்டு விழா...விழாக்கோலத்தில் லண்டன்..
அதே போல் ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் மது நுகர்வில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒருவர் ஆண்டுக்கு 46.9 லிட்டர் மது அருந்துகிறார். இத்தாலி மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தாலியில் ஒரு தனி மனிதர் ஆண்டுக்கு 46 லிட்டர் மது அருந்துகிறார். இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் சராசரியாக 35.3 லிட்டர் மது அருந்துகின்றனர். இதேபோல், ஆஸ்திரியா ஐந்தாவது இடத்திலும், ஆஸ்திரேலியா ஆறாவது இடத்திலும், ஜெர்மனி ஏழாவது இடத்திலும், ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் 10வது இடத்திலும் உள்ளன.
போர்த்துகலில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இது உலகின் பழமையான தேசங்களில் ஒன்றாகும். உலகின் பழமையான கிபி 1732 இல் தொடங்கப்பட்ட புத்தகக் கடைகள் இங்கு உள்ளன. மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் போர்த்துகல் நான்காவது இடத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol, Alcohol consumption