கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு அறிவித்தன.
கொரோனாவின் கோர தாண்டவத்தால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, இரண்டாம் அலை என வரிசையாக கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதன் தாக்கத்தால் ஏராளமானாரின் வாழ்க்கை முறையே மாற்றம் கண்டது. நீண்ட ஆய்வுக்கு பிறகு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இருப்பினும், ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தனி நபர் தொடங்கி பல்வேறு நாடுகள் வரை மீள முடியாமல் தவித்து வருகின்றன. இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 3 ஆண்டுகளாக அமலில் இருந்த கொரோனா அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Covid-19, WHO