முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்கா செல்ல இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை... அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்கா செல்ல இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை... அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவிற்குச் செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • international, IndiaAmerica America America

வெளிநாட்டுப் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உலகையை முடக்கியது. உலக நாடுகள் அனைத்து தனித் தனித் தீவுகளாக மாறும் சூழல் உருவானது. அதனையடுத்து, கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் வெளிநாட்டுப் பயணங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின், தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக செலுத்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு நிபந்தனை விதித்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் 11-ஆம் தேதியுடன் பொதுச் சுகாதார அவசரநிலை முடிவுக்கு வருவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும், தொற்று ஏற்படுபவர்களில் 91 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Also Read : சொகுசு கப்பலில் நிர்வாண பார்ட்டி - ஆடை அணிய அனுமதி இல்லை - ஆர்வம் காட்டும் ஜோடிகள்

top videos

    இதனைத்தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு அமெரிக்கா செல்லுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: America, Corona Vaccine