நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீனா அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஒருகாலத்தில் அதிகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் கொண்ட நாடாக சீனா விளங்கி வந்த நிலையில், மக்கள்தொகையை கட்டுப்படுத்த 1980இல் கறாரான சட்டங்களை போட்டது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்ளக் கூடாது என சட்டம் இயற்றியதால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
கட்டுப்பாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015க்குப்பின் கொண்டுவரத் தொடங்கியது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட யோசனைகளை சீனா அரசுக்கு நிபுணர்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில், கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அந்நாட்டின் 9 முன்னணி கல்லூரிகள் ஒரு வார காலம் மாணவர்களுக்கு "fall in love" விடுமுறையை வழங்கியுள்ளனர். அந்நாட்டில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, இயற்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றை நன்கு அறிந்து அனுபவிக்கலாம் என்ற நோக்கில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புற்றுநோயால் மறைந்த நண்பன்.. 3 ஆண்டுகள் டென்ட்டில் தங்கி ரூ.7.5 கோடி நிதி திரட்டிய கின்னஸ் சாதனை சிறுவன்..
ஏற்கனவே, பிறப்புவிகித்தை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை சீனாவின் பல்வேறு மாகாணங்கள் அமல்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் இது போன்ற மேலும் பல யோசனைகளையும், திட்டங்களையும் சீனா செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, College student, Love