சீனாவில் புதியவகை கொரோனா அலை ஜூன் மாத இறுதிக்குள் உச்சம் தொடும் என்றும் அப்போது ஒரு வாரத்தில் ஆறரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெவ்வெறு உருமாற்றங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் (XBB omicron subvariants) மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடப்பு மாத இறுதி 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதன் பொருட்டு, XBB வைரஸை தடுக்க XBB. 1.9.1, XBB. 1.5, என்ற இரண்டு புதிய தடுப்பூசிகளை சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷான் அறிமுகம் செய்துள்ளார். மேலும் 4 தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகை கொரோனா தொற்றினால் பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள சீன அதிகாரிகள், வயதானவர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். கூட்டமான இடங்களை தவிர்க்கவும், தொடர்ந்து முகக்கவசங்கள் அணியவும் பொதுமக்களுக்கு சீன அரசு வலியுறுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் பரவியது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் ஆனால் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: ஸ்னேப்சாட்டில் சிறுமிகளுக்கு குறி.. நிர்வாணப்படங்களை அனுப்பி பிளாக் மெயில் - சிக்கிய பின்லாந்து இளைஞர்
இதனிடையே, அமெரிக்காவின் சாகடாஹோக் கவுண்டியில் போவாசான் என்னும் உண்ணியால் பரவக்கூடிய அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அணில், மான் உள்ளிட்டவற்றில் இருந்து பரவும் இந்த தொற்றால், அமெரிக்கா, கனடா, ரஷ்யாவில் ஆண்டுக்கு 25 பேர் வரை பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19