முகப்பு /செய்தி /உலகம் / ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

ஸ்டாலின்

ஸ்டாலின்

திருபோரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பந்தம்.

  • Last Updated :
  • international, Indiajapanjapanjapanjapan

சென்னை அருகே செயல்படும் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசுடன் ஜப்பான் நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூரைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஒசாகா மாகாணத்தில் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர் கென் பாண்டோ-வை சந்தித்தார்.

சென்னையை அடுத்த திருப்போரூரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன ஆலையில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஏர் பேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையை, மேலும் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் டைசல் நிறுவன இயக்குநர் கென் பாண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க... சென்னை திரையரங்கில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுப்பு...

இந்த ஒப்பந்தம் மூலம் 53 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: CM MK Stalin, Japan