தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளனர்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும்-சென்னை அருகே திருப்போரூரில் செயல்படும் ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (DAICEL SAFETY SYSTEM) நிறுவனத்துக்கும் இடையே, 83 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு (KOMATSU) நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, சென்னையில் அடுத்தாண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததுடன், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழாய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து சர்வதேச சந்தை தேவைகளை கோமாட்சு நிறுவனம் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Japan, MK Stalin