இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர்களான பிரதமர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வசிக்கும் பகுதியாக டவுனிங் ஸ்ட்ரீட் பகுதி உள்ளது. இந்த குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம், இந்நிலையில் நேற்று வெள்ளை நிற கார் ஒன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள இரும்பு தடுப்புகள் மீது மோதியது. இந்த சம்பவத்தின்போது ரிஷி சுனக் தனது அரசு இல்லத்தினுள் இருந்தார்.
இதன் பின்னணியில் சதித்திட்டம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரை ஓட்டிவந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். காரை இயக்கி சேதம் ஏற்படுத்த முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார் மோதிய வேகத்தில் தடுப்புகள் சேதமடைந்தன. காவல்துறையினரின் வழக்கமான பணிகள் இதனால் பாதிக்கப்பட்டன.
மேலும் படிக்க... School Reopen date | ஜூன் 7 பள்ளிகள் திறப்பு? இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் அமைச்சர்...!
கார் மோதியதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பிரிட்டனின் முக்கியமான இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் 30 நிமிடங்கள் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பின்னர் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, England, Rishi Sunak