ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் அடால்ஃப் ஹிட்லர். ஐரோப்பிய யூனியனையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பேராசை பிடித்தவர். இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை இவர் செய்த சித்ரவதையை இன்று வரை யூதர்கள் மட்டுமல்ல உலகமே மறக்காது. அரக்க மனம் படைத்தவராக ஹிட்லர் மட்டுமல்ல. அவரது படையில் பெரும்பாலானோர் அப்படித்தான் இருந்துள்ளார்கள். அப்படி ஒரு பெண்ணும் இருந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் தான் இர்மா கிரேஸ்.
அவர் முகாம்களில் நடத்திய சித்ரவதைகள் ஹிட்லருக்கு இணையானவை என்று சொல்லப்படுகிறது. அவர் மிக இளம் வயதிலேயே கொடுமையின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டார். இந்த காரணத்திற்காக இர்மாவை 'ஆஷ்விட்ஸ் ஹைனா' அல்லது 'அழகான மிருகம்' என்று அழைத்திருக்கிறார்கள்.
இர்மா 1923 இல் பிறந்தார். அவருக்கு 13 வயதாகும்போது அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டார். இவரின் குழந்தைப் பருவம் மிகவும் கொடுமையாக இருந்துள்ளது. பள்ளியில் அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்குப் பதில் சொல்லத் தைரியம் இல்லை. அதனால் அவர் தனது 18 வயதிலேயே பள்ளிக்கு விடைபெற்றார். பணம் சம்பாதிப்பதற்காக சில காலம் வயல்களில் வேலை செய்துவிட்டு கடையில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.
இவருக்கு 19 வயது ஆனதும், ஹிட்லரின் கொள்கைகளை அவள் மிகவும் விரும்பியதால் நாஜி இராணுவத்தில் சேர்ந்தாள். அவர் பெண் கைதிகளை மேற்பார்வையிடும் ரேவன்ஸ்ப்ரூக் வதை முகாமில் காவலராக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, 1943 இல், கிரேஸ் நாஜிகளின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான வதை முகாமான ஆஷ்விட்ஸுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவருடைய வேலைத்திறமையால் மூத்த கண்காணிப்பாளராக (SS) பதவி உயர்வு பெற்று அங்கு அனுப்பப்பட்டார்.
நாஜிகளின் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது மிக உயர்ந்த பதவி இதுவாகும். இவ்வளவு சக்தி கிடைத்தவுடன் இர்மா தன் உண்மை முகத்தைக் காட்ட ஆரம்பித்தாள். வதை முகாமில் இருந்து தப்பியவர்களை இர்மா நடத்திய விதம் மிகவும் கொடூரம். ஆல் தட்ஸ் இன்ட்ரஸ்டிங் இணையதளத்தின் அறிக்கையின்படி எரிவாயு அறைக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய போதெல்லாம், இர்மா மிக அழகான பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அழகான பெண்களைக் கிண்டல் செய்வது அவர் வழக்கம். அழகான பெண்களின் மார்பில் அடித்துக் காயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, யூதப் பெண்களைக் காவலாளிகளாக்கி சிறைக்குள் நுழைந்து மற்ற பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்வது இர்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம். பல சமயங்களில் கைதிகளின் வாயில் நாய்களை வாந்தி எடுக்கச் செய்திருக்கிறார். மேலும் இரத்தம் கசியும் வரை தன் கூரான குதிகால் காலணிகளால் கைதிகளின் உடல்களை மிதிப்பாராம்.
இர்மாவுக்கு மரண தண்டனை
உலகப்போரின் முடிவில் ஹிட்லர் தோற்று ஓடிய பிறகு 1945 இல், இர்மா உள்ளிட்ட 45 நாஜிக்கள் பிரிட்டிஷ் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இர்மா மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இர்மா தன்னை நிரபராதி என்று கூறினார். ஆனால் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியம் அவரது உண்மையை அம்பலப்படுத்தின. இதையடுத்து 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள், வெறும் 22 வயதில் இர்மா தூக்கிலிடப்பட்டார். 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்பட்ட மிகவும் இளம் பெண் இர்மா கிரேஸ் என்று வரலாறு கூறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Germany