முகப்பு /செய்தி /உலகம் / நண்பரின் உடலை 2 ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்திருந்த ரூம் மெட்... வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்..!

நண்பரின் உடலை 2 ஆண்டுகளாக ப்ரீசரில் வைத்திருந்த ரூம் மெட்... வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்..!

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான ஜான்சன்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான ஜான்சன்

உடன் வசித்த நண்பரின் மரணத்தை மறைத்து அவரின் பென்சன் பணத்தை இரண்டு ஆண்டுகளாக அனுபவித்து வந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

பிரிட்டன் நாட்டில் ஒரு நபர் தன்னுடன் வசித்த நபர் உயிரிழந்ததை மறைத்து இரண்டு ஆண்டு காலம் அவரது பென்ஷன் பணத்தை இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி ஏமாற்றி வாழ்ந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது.

பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் டேமியன் ஜான்சன். 52 வயதான இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடன் ஜான் வெயின்ரைட் என்ற நபரும் வசித்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக ஒரே குடியிருப்பில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், 2018ஆம் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜான் உயிரிழந்துள்ளார்.

தன்னுடன் வசிக்கும் நண்பர் உயிரிழந்த உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்த ஜான்சன் அவரது உடலை அடக்கம் செய்யாமல் சுமார் இரண்டு ஆண்டுகள் பிரிசர் பெட்டியில் வைத்து பதப்படுத்தியுள்ளார். ஜான் உயிரிழந்ததை மறைத்து சுமார் இரண்டு ஆண்டுகள் அவரின் பென்சன் பணம் உள்ளிட்ட நிதிகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

ஜான் 2018இல் இறந்த நிலையில், இந்த உண்மை 2020ஆம் ஆண்டில் தான் வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஜான்சன் மீது மோசடி புகார் பதியப்பட்டு வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. உயிரிழந்த ஜானின் பணம் தனக்கு உரிமைபட்டது தான் என நீதிமன்றத்தில் ஜான்சன் தெரிவித்தார். இருப்பினும், வழக்கு தன்மை கருதி மன்னிப்பு கோரிய அவர், உயிரிழந்ததை மறைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை தந்தார்... ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி பரபரப்பு புகார்..!

top videos

    ஜான்சன் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கு தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்சன் பணத்திற்காக ஒருவர் இறந்ததை மறைத்து உடலை இரண்டு ஆண்டுகள் ப்ரீசரில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: UK, Viral News