முகப்பு /செய்தி /உலகம் / பெற்றோரால் பிரிந்த காதல் ஜோடி... 60 ஆண்டுகளுக்கு பிறகு பேரக்குழந்தைகள் முன்பு நடந்த திருமணம்!

பெற்றோரால் பிரிந்த காதல் ஜோடி... 60 ஆண்டுகளுக்கு பிறகு பேரக்குழந்தைகள் முன்பு நடந்த திருமணம்!

லென்- ஜென்னட் ஜோடி

லென்- ஜென்னட் ஜோடி

தனது இளம் வயதில் சேர்ந்த வாழ இயலாத காதல் ஜோடி 60 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்ட ஆச்சரியமான சம்பவம் பிரிட்டன் நாட்டில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaLondonLondon

பிரிட்டன் நாட்டில் லென் அல்பிரைட்டன் என்ற 79 வயது முதியவர் 78 வயதான தனது காதலி ஜென்னட் ஸ்டீர் என்ற காதலியை தற்போது திருமணம் செய்துள்ளார். இந்த ஜோடியின் சுவாரசியமான காதல் கதை 1963இல் தொடங்குகிறது. அப்போது 19 வயதான லென், 18 வயதான தனது காதலி ஜென்னட்டை சந்தித்துள்ளார். இருவரும் செவிலி பணிக்காக நியூபோர்ட் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டபோது இருவரும் காதல் மலர்ந்துள்ளது.

இவர்களின் காதல் திருமணத்திற்கு ஜென்னட்டின் வீட்டார் சம்மதிக்கவில்லை.பிரிட்டன் நாட்டில் அப்போது பெண்ணின் திருமண வயது 21 என்பதால் ஜென்னட்டிற்கு பெற்றோர் சம்மதம் தேவையாக இருந்தது. அங்கிருந்து ஆஸ்திரேலியா தப்பியோடி வாழாலம் என முடிவெடுத்து இந்த ஜோடி மோதிரம் மாற்றியுள்ளனர்.

அத்துடன் லென் முதலில் ஆஸ்திரேலியா சென்று தனது காதலிக்காக காத்திருந்தார். ஆனால், பெண் ஜென்னட்டின் வீட்டாருக்கு இவர்கள் மோதிரம் மாற்றிய விவகாரம் தெரிந்து கொண்டு லென்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க முடியாது என ஆஸ்திரேலியா அனுப்பிவில்லை.

இதனால் இந்த காதல் ஜோடி அப்போது ஆசைபட்ட படி ஒன்றாக வாழ முடியவில்லை. லென் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தினார். அவருக்கு 3 குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. அதேபோல், ஜென்னட்டும் பிரிட்டனில் ஒருவரை திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுக்கு தாயானார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் லென் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இளமை கால காதலியை பார்க்கலாம் என பிரிட்டனுக்கு தேடி ஓடி வந்துள்ளார். சும்மா காதலி எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவிட்டு போகாலம் என்று தான் வந்துள்ளார். ஜென்னட்டின் ஊருக்கு வந்து வீட்டை கண்டுபிடித்து அவரை பார்த்துள்ளார்.

அப்போது, ஜென்னட் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜென்னட்டின் கணவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஓராண்டு கழித்து 2018இல் இருவரும் தங்கள் இளமை கால காதலை மீண்டும் தொடர முடிவெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.50 லட்சம் வேணுமா? அப்ப இந்த ஊருக்கு வாங்க... அரசே கொடுக்கும் அதிரடி ஆஃபர்...

இவரும் ஒன்றாக வாழத் தொடங்கிய நிலையில், இப்போது ஏன் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று யோசித்து திருணம் செய்ய முடிவெடுத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் தங்கள் பேரக்குழந்தைகள், கொல்லுப் பேர குழந்தைகள் முன்னிலையில் 79 வயதான லென்னும், 78 வயதான ஜென்னட்டும் திருமணம் செய்துகொண்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தங்கள் காதலுக்கு இப்படி ஒரு ஹேப்பி என்டிங் கிடைக்கும் என இந்த காதல் ஜோடி உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தானே.

First published:

Tags: Britain, Love, Love Tips, Lovers