ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் அலெக்ஸ்சான்டர் லுக்காஷென்கோ. இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு வந்த கையோடு லுக்காஷென்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஷ்யா - உக்ரைன் இடையே ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போரானது அண்டை நாடுகள் மத்தியிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை அவை வழங்கி வருகின்றன.
இந்த சூழலில் தான் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவுக்கு அதிபர் விளாதிமிர் புதினுக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளது. பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ புதினின் நெருங்கிய நண்பர் மற்றும் தீவிர ஆதரவாளர். போர் நடைபெறும் சூழலில் இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன் அணு ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. ரஷ்யாவும் தனது அணு ஆயுதங்களை பெலாரசுக்கு அனுப்பி வைத்தது. மேலும், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவமும் பயற்சி மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.
இப்படிப்பட்ட பரபரப்பு நிறைந்த சூழலில் பெலாரஸ் அதிபருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. லுக்காஷென்கோ உடல்நிலை குறித்து ரஷ்யா அரசு உண்மையை மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் வெலரி செப்காலோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா.. பகீர் காரணம் இதோ
மேற்கத்திய நாட்டு தலைவர்கள் இதில் தலையிட்டு தேர்தல் நடத்தவோ அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார். பெலராஸ்சில் லுக்காஷென்கோ தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உள்ள மேற்கு நாடுகள் அங்கீகரிப்பதில்லை. இது புதினின் கைப்பாவையாக செயல்படும் அரசு என மேற்கு நாடுகள் விமர்சித்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine, Vladimir Putin