இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாக வளைகுடா நாடுகள் இந்திய அரசைக் கண்டிக்க வேண்டும் என்றும் பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாஃபியாவாக இருந்து அரசியல் களத்தில் இறங்கிய உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் ஆகியோர் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி போலீசார் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பத்திரிகையாளர்கள் போர்வையில் வந்து மூன்று பேர் அவர்களைச் சுட்டுக் கொலை செய்தனர். நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பிரக்யராஜ் நகரில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர்களை போலீசார் அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுள்ளது. அதிக் அகமது மற்றும் அவரின் தம்பி காவல்துறை முன்னிலையில் கொலை செய்யப்பட்டதற்கு பஹ்ரைன் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
”இந்தியர்கள் பஹ்ரைனில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியர்கள் பஹ்ரைனில் சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களைப் பாதுகாத்து வருகிறோம். அவர்களின் மதங்களை பின்பற்றுகிறார்கள். நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை கவலை அளிக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது” என பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
Also Read : இங்கிலாந்தில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்...!
மற்றொரு எம்.பி பேசும்போது, இந்தியாவில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இது போன்ற விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாகவும், இஸ்லாமியர்கள் மோசமாகத் தாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்தியத் தூதரகத்திற்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த எம்.பி வலியுறுத்திப் பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Murder case, Uttar pradesh