பாகிஸ்தானில் இரண்டு ஆண்குறிகளுடன் பிறந்த குழந்தை மருத்துவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
டிஃபாலியா எனப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளது. ஆனால் மலம் கழிக்க ஆசனவாய் இல்லை. இந்த அரிய நிலை ஆறு மில்லியன் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மருத்துவ அறிவியல் வரலாற்றில் டிஃபாலியா தொடர்பாக இதுவரை 100 கேஸ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. முதன் முதலில் 1609 ஆம் ஆண்டு இப்படியான ஒரு குழந்தை பிறந்ததாக பிரபல மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானில் பிறந்துள்ள குழந்தைக்கு ஒரு ஆண்குறி மற்றொன்றை விட ஒரு சென்டிமீட்டர் நீளமாக இருப்பதாகவும், இரண்டும் சிறுநீர் கழிக்கக்கூடியதாகவும் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆசனவாய் இல்லாததால், கொலோனோஸ்கோபி மூலம் துளை ஒன்றை உருவாக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அந்த ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்களின் குடும்பத்தில் யாருக்கும் பிறப்பு குறைபாடுகள் இருந்ததாக வரலாறு இல்லை.
ஒரு ஆண்குறி 1.5 சென்டிமீட்டர் நீளமும் மற்றொன்று 2.5 சென்டிமீட்டரும் இருந்துள்ளது. சிறுவனுக்கு இரண்டு சிறுநீர்க்குழாய்களுடன் இணைக்கப்பட்ட ஒற்றை சிறுநீர்ப்பை இருந்தது, இரண்டு ஆண்குறிகளிலிருந்தும் சிறுநீரை வெளியேற்ற முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நாட்கள் சிறுவன் கண்காணிப்பில் இருந்தான். பின்னர் அவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தொடர் ஃபாலோ-அப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan News in Tamil