தனது 4 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பெண் தற்போது கொலைக்கான போதிய ஆதரங்கள் இல்லததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியைச் சேர்ந்த கேத்லீன் ஃபோல்பிக் என்ற பெண்ணின் 4 குழந்தைகள் 1989 முதல் 1999 காலகட்டத்தில் மரணமடைந்தன. தனது குழந்தைகள் இயற்கையாக இறந்ததாக கேத்லீன் தெரிவித்து வந்த நிலையில், இவர் தான் அனைத்து குழந்தைகளையும் கொன்றிருப்பார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறத் தொடங்கியது.
ஆஸ்திரேலியாவின் மோசமான பெண் சீரியல் கொலையாளி என்ற அவர் அழைக்கப்பட்ட நிலையில், 2003ஆம் ஆண்டு கேத்லீனை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. அத்துடன் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகாலம் கேத்லீன் சிறை வாசம் செய்த நிலையில், இந்த வழக்கில் 2021இல் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
2021 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் கேத்லீனை விடுதலைக்கு செய்ய வேண்டும் எனக் கோரி மனு ஒன்றை தயாரித்து கையெழுத்திட்டனர். அவர்களின் கூற்றுப்படி, இந்த வழக்கில் புதிய தடயவியல் சான்றுகள் விவரிக்க முடியாத இறப்புகள் சாத்தியம் உள்ளது. உண்மையில் அரிதான மரபணு மாற்றங்கள் அல்லது பிறக்கும் போது அசாதாரண உடல்நலக்குறைவே மரணத்திற்கு காரணம். எனவே கேத்லீன் கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை என விடுதலை கோரினர்.
இதைத் தொடர்ந்து வழக்கானது மீண்டும் கடந்தாண்டு மே மாதம் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி டாம் பாத்ர்ஸ்ட், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று மரணங்களுக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடிய மருத்துவ நிலை கண்டறியப்பட்டது என்றார்.
இதையும் படிங்க: அம்மாவின் சடலத்துடன் 6 ஆண்டுகளாக வாழ்ந்த 60வயது மகன்.. இத்தாலியில் பகீர் சம்பவம்
சாரா மற்றும் லாரா ஃபோல்பிக் ஒரு அரிய மரபணு மாற்றத்தைக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் பேட்ரிக் ஃபோல்பிக் ஒரு "அடிப்படையான நியூரோஜெனிக் நிலை" இருக்கலாம் என்று கூறினார். இதன் அடிப்படையில் குழந்தைகள் குழந்தைகள் கொலை செய்யப்படவில்லை என்றும் விசாரணையில் தாய் கேத்லீன் அக்கறை கொண்டவராக காணப்படுகிறார் என நீதிபதி டாம் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உதவிய ஆஸ்திரேலிய அறிவியல் அகாடமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Crime News, Murder case