முகப்பு /செய்தி /உலகம் / 26 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கர்செட்டி நியமனம்..!

26 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கர்செட்டி நியமனம்..!

 எரிக் கர்செட்டி

எரிக் கர்செட்டி

Eric Garcetti US ambassador to India | 2021 ஜூலை 9 ஆம் தேதி எரிக் கர்செட்டியை இந்தியாவிற்கான தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaUSAUSAUSAUSAUSA

26 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கர்செட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்தவர் கென்னத் ஜெஸ்டர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். அன்று முதல் இந்தியாவிற்கான தூதரை அமெரிக்க நியமிக்கவில்லை.

இந்நிலையில் இந்தியாவிற்கான தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முன்னாள் மேயரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான எரிக் கர்செட்டியை இந்தியாவிற்கான தூதராக நியமிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் எரிக் கர்செட்டி இந்தியாவிற்கான தூதராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் இல்லாமல் இருந்த மிக நீண்ட காலம் இது தான். 1993 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான தூதராக இருந்த தாமஸ் பிக்கரிங் ரஷ்யாவிற்கான தூதராக மாற்றப்பட்டார். 1994 ஆம் ஆண்டு தூதர் மாற்றப்பட்ட பிறகு சுமார் 14 மாதங்களாக இந்தியாவிற்கான தூதரை அமெரிக்காவின் பில் கிளிண்டன் அரசு நியமிக்கவில்லை. அதன்பிறகு ஃபிரான்க் விஸ்னர் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு மிக நீண்ட காலம் இந்தியாவிற்கான தூதர் இல்லாமல் இருந்தது தற்போது தான். இது நீண்ட காலமாக காலியாக உள்ள ஒரு முக்கியமான பதவியை நிரப்புவதற்கான தீர்க்கமான முடிவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளதாக கர்செட்டி அறிக்கையில் கூறியுள்ளார்.மேலும், இந்தியவாவிற்கான தூதர் என்பது மிகவும் பொறுப்பான பதவி என்றும், அந்த பொறுப்பில் மிகவும் கடினமாக உழைத்து சிறப்பான பணியை வெளிப்படுத்துவேன் என்றும் கர்செட்டி தெரிவித்துள்ளார்.

Also Read : நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவிற்கான தூதராக தன்னை நியமனம் செய்வதற்காக தனக்கு வாக்களித்த அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும், இந்தியாவில் அமெரிக்காவின் முக்கியமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது சேவையைத் தொடங்க தயாராகவும் ஆர்வமாகவும் இருப்பதாகவும் எரிக் கர்செட்டி தனது கூறியுள்ளார்.

2021 ஜூலை 9 ஆம் தேதி எரிக் கர்செட்டியை இந்தியாவிற்கான தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்த நிலையில் கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க செனட் சபை இவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.

தற்போது இடைக்கால தேர்தல் நடைபெற்று செனட் சபையில் உறுப்பினர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எரிக் கர்செட்டியின் பெயரை அதிபர் பைடன் மீண்டும் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரை மீது வாக்குப்பதிவு நடைபெற்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தூதர் என்ற சவாலான பணியை எரிக் கர்செட்டி திறம்பட மேற்கொள்வார் என தான் நம்புவதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்.

First published: