முகப்பு /செய்தி /உலகம் / 9,000 பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்.. அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!

9,000 பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்.. அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Amazon lay off | அமேசான் நிறுவனத்தில் க்ளவுட் கம்ப்யூடிங்(cloud computing) மற்றும் விளம்பரப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நீக்கப்பட இருப்பதாக தகவல்.

  • Last Updated :
  • interna, Indiaamericaamericaamerica

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், மேலும் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ட்விட்டர், மெட்டா, கூகுள் என உலக அளவிலான பெரு நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. உலகஅளவில் அமேசான் நிறுவனத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இரண்டு மாத இடைவெளியில், மேலும் 9,000 பேரை நீக்க இருப்பதாக அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி(Andy Jassy) அறிவித்துள்ளார்.

பொருளாதாரம் நிலையற்ற சூழலில் இருப்பதால் செலவுகளையும், பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது கடினமான முடிவு என்றாலும், நிறுவனத்தின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

top videos

    அமேசான் நிறுவனத்தில் க்ளவுட் கம்ப்யூடிங்(cloud computing) மற்றும் விளம்பரப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் நீக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த நாட்டில் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளது என்பது குறித்து அமேசான் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    First published:

    Tags: Amazon