பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக தீவிரமான மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறியதில் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் ராணுவத்திற்கு எதிராக பேரணி போராட்டங்களை இம்ரான் கான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
பதிலுக்கு இம்ரான் கான் மீதும் ஆளும் அரசு மற்றும் ராணுவம் கடுமையான குற்றச்சாட்டுகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த மோதல் இம்மாத தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஒன்பதாம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, அவரை துணை ராணுவமான ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர்.
பின்னர் பாகிஸ்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் ஊழல் மற்றும் தேசதுரோக குற்றச்சாட்டுகள் அடக்கம்.
இந்நிலையில், பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் குவாதிர் பல்வேறு பரபரப்பு புகார்களை இம்ரான் கான் மீது அடுக்கியுள்ளார். அவர் கூறுகையில், "மே 9ஆம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது PIMS மருத்துவமனை அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்தனர். அதை ஆய்வு செய்து National Accountability Bureau (NAB) முடிவுகளை வெளியிட்டது.
இதையும் படிங்க: ஸ்னேப்சாட்டில் சிறுமிகளுக்கு குறி.. நிர்வாணப்படங்களை அனுப்பி பிளாக் மெயில் - சிக்கிய பின்லாந்து இளைஞர்
அதில், இம்ரான் கான் போதை நிலையில் இருந்ததும், மது மற்றும் கொகைன் போன்ற போதைப்பொருள்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும் அவர் தெளிவான மனநிலையில் இருக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவரின் செயல்கள் சந்தேகத்தை எழுப்புகிறது" என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan