முகப்பு /செய்தி /உலகம் / நடுவானில் 2 விமானங்கள் மோதுவது போல் பறந்ததால் பரபரப்பு.. நேபாளத்தில் கோர விபத்து தவிர்ப்பு..

நடுவானில் 2 விமானங்கள் மோதுவது போல் பறந்ததால் பரபரப்பு.. நேபாளத்தில் கோர விபத்து தவிர்ப்பு..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாடு வானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பெரும் விபத்துக்குள்ளாக இருந்த பகீர் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaKathmanduKathmandu

கடந்த மார்ச் 24ஆம் தேதி அன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளுடன் டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டு நோக்கி பறந்து சென்றது. அப்போது மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து நேபாளம் நோக்கி வந்த நேபாள் ஏர்லைன்ஸ் விமானமும் அதே வழியில் வந்துள்ளது.

இந்த இரு விமானங்களும் ஒரு கட்டத்தில் அருகருகே பறக்கத் தொடங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 19,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் கீழே இறங்கி பறந்து கொண்டிருந்தது. அந்த வேளையில், நேபாள விமானம் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

இரண்டு விமானங்களும் குறுகிய இடைவெளியில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் இதை கவனித்த காத்மண்டு விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் நேபாள விமானத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து நேபாள விமானம் 15,000 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி 7,000 அடி உயரத்தில் பறந்தது.

நல்வாய்ப்பாக இது உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நேபாள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில், திர்புவன் சர்வதேச விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்களை 3 பேரை சஸ்பெண்ட் செய்தது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தரப்பு இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கவில்லை.

top videos
    First published:

    Tags: Air India, Flight Crash, Nepal