உலகில் உள்ள மனிதர்களுக்கு வித விதமான முறையில் பிரச்சனைகள் வந்தாலும், அனைத்து மனிதர்களும் விரும்பவது நோயற்ற வாழ்வைத் தான். வேறு எந்த விதமான பிரச்சனைகளையும் மனிதர்கள் எதிர்கொண்டு சமாளித்தாலும், நோய் பாதிப்பு மனிதர்களை முற்றிலும் துவண்டுவிட செய்துவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதை உணர்த்தும் விதமாகவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி கூறப்பட்டுள்ளது.
ஆனால், இயற்கையில் சில மனிதர்களுக்கு அரிய வகை நோய்கள் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கையே புரட்டி போட்டு விடும் அளவுக்கு மாற்றிவிடுகிறது. அப்படித்தான் பிரிட்டன் நாட்டில் ஒரு இளம் பெண்ணுக்கு வந்த அரிய வகை நோய் அவரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தவிக்க வைத்துள்ளது. பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் வசிக்கும் 30 வயது பெண் எல்லே ஆடம்ஸ். இவர் எந்த வித உடல்நலக்குறைவும் இல்லாமல் 2020 அக்டோபர் வரை சிறப்பாக வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில், 2020 அக்டோபர் மாதம் ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறு நாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால், அன்றய தினம் அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. பதற்றமடைந்த அவர் தண்ணீர் உள்ள நீர் ஆகாரங்களை அதிகம் குடித்தார் அப்படி இருந்தும் அவரால் அன்று சிறுநீர் கழிக்க முடியவில்லை.
பதற்றமடைந்த அவர் அருகே உள்ள மருத்துமனைக்கு சென்று தனது பிரச்சனையை கூறியுள்ளார். அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர். சராசரியாக ஒரு பெண்ணால் 500 மிலி சிறுநீர், ஆண்ணால் 700 மிலி சிறுநீர் தான் அடக்கி வைக்க முடியும். ஆனால், இவருக்கு ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறவில்லை.
உடனடியாக மருத்துவர்கள் டியூப் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர். ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது யோகா செய்து நன்கு தூங்குங்கள் பிரச்சனை சரியாகி விடும் என பெண்ணிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் பெண் எல்லேவுக்கு இந்த பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. அன்று தொடங்கி ஒவ்வொரு முறையும் டியூப் கருவி மூலம் செயற்கை முறையில் தான் சிறுநீரை வெளியேற்றி வருகிறார்.
இப்படியே ஓராண்டு கழிந்த நிலையில், 14 மாதங்களுக்குப் பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு Fowler's syndrome என்ற அரிய வகை நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய நோய் கொண்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது, குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த அரிய நோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நோய்க்கான உரிய காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: பெற்றோரால் பிரிந்த காதல் ஜோடி... 60 ஆண்டுகளுக்கு பிறகு பேரக்குழந்தைகள் முன்பு நடந்த திருமணம்!
இதனால் பாதிக்கப்பட்ட எல்லே ஆடம்ஸ் கடந்த 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வந்துள்ளார். பின்னர் இவருக்கு catheter என்ற சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கை திடீரென மாறிப்போனதாக கூறும் எல்லே, இந்த பிரச்சனையை தவிர மற்ற எந்த உடல் நல பிரச்சனையும் தனக்கு இல்லை என்கிறார்.
catheter என்ற மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வரும் இவர் Sacral Nerve Stimulation என்ற சிகிச்சையை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை இவரது பிரச்சனையை சற்று மேம்படுத்தி பாதிப்பை பாதியாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆரம்ப காலத்தை விட சிகிச்சைக்குப் பின் தற்போது பரவாயில்லை என்று மனம் தளராமல் நம்பிக்கை கொண்டுள்ளார் இளம் பெண் எல்லே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Disease, UK, Urine, Viral News