முகப்பு /செய்தி /உலகம் / ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சித்த உக்ரைன்... வெளியான வீடியோ... பரபரப்பு தகவல்கள்..!

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சித்த உக்ரைன்... வெளியான வீடியோ... பரபரப்பு தகவல்கள்..!

விளாதிமிர் புதின்

விளாதிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும்  அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு உக்ரைன் மீது பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் கிரெம்லினை குறிவைத்து ஏவப்பட்டுள்ளன. இதை ரஷ்ய பாதுகாப்பு படை தடுத்து செயலிழக்க வைத்துள்ளது. இது திட்டமிட்டப்பட்ட பயங்கரவாத சதி, ரஷ்ய அதிபர் புதினின் உயிரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலில் புதினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டடங்களுக்கும் எந்த சேதமும் இல்லை. இதற்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், 2022 பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனுக்கு கலக்கத்தை தந்தன.

இதையும் படிங்க: சர்ச்சையான காளியின் ட்வீட்.. மன்னிப்பு கோரியது உக்ரைன் பாதுகப்புத்துறை அமைச்சகம்..

top videos

    இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மேலும் சில நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரைன் உத்வேகத்துடன் பதில் தாக்குதல் நடத்தி ரஷ்யாவுக்கு தக்க பதிலடியை தந்து வருகிறது. போர் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இந்த மோதல் போக்கை மேலும் வலுப்படுத்தும் விதமாக சமீபத்திய தாக்குதல் செய்தி அமைந்துள்ளது.

    First published:

    Tags: Russia - Ukraine, Vladimir Putin