திருமணம் என்பது ஒரு நீண்டகால பந்தம், அதில் இரண்டு பேர் சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். சில திருமணங்கள் வியப்பையும், வேடிக்கையையும் ஏற்படுத்தும். அப்படித்தான் லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் ஒரு திருமணம் நடந்துள்ளது. அங்கு 65 வயது முதியவர் 16 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
கணவன்-மனைவி இடையே இப்படியொரு வயது வித்தியாசத்தை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது. 10-15 அல்லது 20 வருட இடைவெளியை கூட பார்த்திருக்கலாம். ஆனால் யாராவது தன்னை விட 49 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டால், அது நிச்சயம் ஆச்சர்யம் தான். பிரேசிலில் உள்ள அரகாரியா நகர மேயரான 65 வயதான ஹிசாம் ஹுசைன் டெஹைனி, 16 வயது சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னை விட 49 வயது குறைந்த பெண்ணை மேயர் திருமணம் செய்தது வயது காரணமாக மட்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை, அதற்குப் பின்னால் நேரடியாக தொடர்புடைய ஒரு பெரிய காரணமும் சொல்லப்படுகிறது. பிரேசிலிய சட்டத்தின் கீழ், 16 வயது சிறுமிகள் திருமணம் செய்யலாம், ஆனால் அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் தான் அது நடக்க வேண்டும். முதியவர் திருமணம் செய்து கொண்ட பெண், அந்த நகரின் அழகு பெண்ணாக இருந்துள்ளார்.
எனினும், விவாதங்கள் சிறுமியின் அழகைப் பற்றியது அல்ல. அவருடைய திருமணத்தால் அந்தப் பெண்ணின் தாய் எவ்வளவு நன்மை அடைந்தார் என்பது பற்றியது. சிறுமியின் தாயார், மரிலின் ரோட், கல்வி அமைச்சகத்தில் கடைநிலை ஊழியராக வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவரது மகள் மேயருடன் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவருக்கு உயர் பதவியும் அதிக சம்பளமும் வழங்கப்பட்டது. இந்த திருமணம் நகரத்தின் துணை மேயர் மற்றும் சிவில் பதிவேட்டின் தலைவரால் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 வருட அனுபவத்தின் காரணமாகவே மாமியாருக்கு இப்பதவி கிடைத்துள்ளதாக மேயர் அலுவலகத்தினால் கூறப்பட்டாலும், இந்த விஷயம் தற்போது பேசுபொருளாய் மாறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: USA