முகப்பு /செய்தி /உலகம் / கனடா ஆற்றில் முழ்கி உயிரிழந்த இந்தியர்கள்... மூன்று வயது குழந்தை உட்பட 6 பேரின் சடலங்கள் மீட்பு...

கனடா ஆற்றில் முழ்கி உயிரிழந்த இந்தியர்கள்... மூன்று வயது குழந்தை உட்பட 6 பேரின் சடலங்கள் மீட்பு...

ஆற்றில் மிதந்த இந்தியர்களில் சடலங்கள்

ஆற்றில் மிதந்த இந்தியர்களில் சடலங்கள்

மூன்று இந்தியர்கள் உள்ளிட்ட ஆறு பேரின் சடலங்களை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • internationa, IndiaAmericaAmerica

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று இந்தியர்கள் உட்பட ஆறு பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

கனடா-அமெரிக்கா நாடுகளின் சர்வதேச எல்லையோரம் மோஹாவ்க் என்ற பகுதியில் ஓடுகிறது செயின்ட் லாரன்ஸ் ஆறு. இந்த ஆற்றில் சில சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று வயதுக் குழந்தை ஒன்றும் இருந்ததாக மோஹாவ்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது மனதை ரணப்படுத்துவதாகவும், இவற்றைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கவலையோடு தெரிவித்துள்ளார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

உயிரிழந்தவர்களில் மூன்று பேர் ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்த போது, உயிரிழந்த மூன்று வயதுக் குழந்தைக்குச் சொந்தமான கனடா நாட்டு பாஸ்போர்ட் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்களுடன் வந்த மற்றொரு குழந்தை காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆற்றில் மேலும் சடலங்கள் உள்ளதா என அந்நாட்டு தீயணைப்பு படை, கடலோர காவல்படை மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த ஆற்றைக் கடந்து அமெரிக்காவிற்கோ அல்லது கனடாவிற்கோ சட்டவிரோதமாகக் குடியேறும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்படி சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோனோர் இந்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் அதிகமாக ஆட்கடத்தல் குற்றங்களும் நடைபெற்று வருகிறது. அதைத் தடுக்கவும் தீவிர ரோந்துப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Also Read : புற்றுநோயால் மறைந்த நண்பன்.. 3 ஆண்டுகள் டென்ட்டில் தங்கி ரூ.7.5 கோடி நிதி திரட்டிய கின்னஸ் சாதனை சிறுவன்..

இதுபோன்ற சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், இந்தப் பகுதியில் சுமார் 105 கிலோமீட்டர் தூரத்தைத் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டு வரவும், கனடாவிற்குள் நுழையும் ரோக்ஷம் சாலையை மூடுவதும் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கனடா நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கனடா மற்றும் அமெரிக்காவிற்கு மெக்சிகோ வழியாகவும் ஏராளமானோர் சட்டவிரோதமாக நுழைய அடிக்கடி முயற்சிப்பதும், அவர்களில் பலர் உயிரை இழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: America, Dead body