அதிதீவிர புயலான மோக்கா கரையைக் கடந்ததால், வங்கதேசம் மற்றும் மியான்மரில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான மோக்கா என்ற அதிதீவிரப் புயல், பங்களாதேஷின் காக்ஸ் பஷார், மியான்மரின் கியாக்பியூ இடையே மியாமன்ரின் சிட்வே பகுதிக்கு அருகே நேற்று மதியம் கரையைக் கடந்தது. 12.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் இது கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சாய்ந்தன. இதேபோல, வீடுகளும் சேதமடைந்தன. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மியான்மரில் மட்டும் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க; Gold rate today: நகை வாங்க இது தான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?
வங்கதேசத்தின் காக்ஸ் பஷாரில் உள்ள உலகின் மிகப்பெரும் அகதிகள் முகாமில், ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மூங்கில் குடியிருப்புகள் சேதமடைந்தன. பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டனர். ஏற்கனவே 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சேதங்களைக் கணக்கெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.