கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடவுளை காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா நோன்பிருந்த 15 பேரை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்தனர்.
குட் நியூஸ் இன்டர்நேஷ்னல் சர்ச் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வரும் மகென்சி என்தெங்கே என்பவர் வேறொரு உலகில் உள்ள கடவுளை காண்பதற்கு உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் என்று பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
இதை உண்மையென நம்பி மாகரினி பகுதியில் உள்ள ஷகாஹோலா கிராமத்தில் உள்ள மக்கள் கிளிஃபி காட்டிற்குள் சென்று உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் இருந்துள்ளனர். இது குறித்த ரகசியத் தகவலை அறிந்த போலீஸார் வனப்பகுதிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இதையும் பாருங்க : சொந்த நாட்டின் மீதே போர் விமானம் குண்டு வீச்சு... போரில் ரஷ்யாவுக்கு வந்த சோதனை
ஆனால் 11 பேர் மட்டுமே உயிருடன் மருத்துவமனைக்கு வந்தனர். வரும் வழியிலேயே 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்து விட்டனர். கடவுளை காண உண்ணாமல் விரதம் இருக்க சொல்லி மூளை சலவை செய்த போதகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். த பாதிரியார் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகள் இறப்பில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சந்தேகத்தின் பேரில் உண்ணாவிரதம் இருந்த காட்டுப்பகுதியை ஆய்வு செய்ததில் கடந்த 3 நாட்களில் மட்டும் 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சமீபத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.