முகப்பு /செய்தி /உலகம் / 2 நாள்களில் 60 புயல் தாக்குதல்.. உருக்குலைந்த அமெரிக்கா.. 32 பேர் மரணம்

2 நாள்களில் 60 புயல் தாக்குதல்.. உருக்குலைந்த அமெரிக்கா.. 32 பேர் மரணம்

அமெரிக்காவில் சூறாவளி பாதிப்பு

அமெரிக்காவில் சூறாவளி பாதிப்பு

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் கோர சூறாவளி பாதிப்பு காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Last Updated :
  • inter, IndiaNew YorkNew YorkNew YorkNew York

சூறாவளி புயல்கள் காரணமாக அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஏற்பட்டுள்ள சூறாவளி பாதிப்பு பல மாகாணங்களை புரட்டி போட்டுள்ளது. கடந்த வாரம் தெற்கே உள்ள மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்பில் சிக்கி சுமார் 25 பேர் மரணமடைந்தனர்.

அத்துடன் கடுமையான பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரு நாள்களில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் சூறாவளி புயல் பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மட்டும் சுமார் 60 சூறாவளி இந்த பகுதியில் உள்ள மாகாணங்களை தாக்கியுள்ளது.

சூறாவளி புயல் மழை பாதிப்பு காரணமாக 8 மாகாணங்களில் மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். பல இடங்களில் மரங்கள், வீடுகள் சூறையாடப்பட்டன. கார் உள்ளிட்ட வாகனங்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சூறாவளி தாக்கியதில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் 8 லட்சம் மக்கள் மின்சார விநியோகம் இன்றி இருளில் மூழ்கி தவிக்கின்றனர். எனவே, மின் விநியோகத்தைச் சீராக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 3,000 வீடுகள் சேதமடைந்த நிலையில் அவற்றை புரணமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போரில் 262 விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் : உக்ரைன் அமைச்சர் பகீர் தகவல்

ஆர்கன்சாஸ் மற்றும் இலியானாய்ஸ் மாகாணங்களில் தான் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததன் பேரில் மாகாண ஆளுநர்கள் அவசர நிலை பிறப்பித்திருந்தனர். இதன் காரணமாக உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Strom, USA