உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் 262 உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 363 விளையாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரித்துள்ளார்.
சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்தின் வருகை தரும் தலைவர் மொரினாரி வதனாபேவை சந்தித்த வாடிம் ஹட்சைட், ரஷ்யாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிக்கப்படக் கூடாது என்றார். ஏனெனில், இந்தப் போரை அவர்கள் அனைவரும் ஆதரிக்கிறார்கள், அதுமட்டுமின்றி இந்தப் போருக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள் என்று ஹட்சைட் குற்றம் சாட்டினார். இந்த தகவல் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிக்கு நடுநிலையாளர்களாக படிப்படியாக திரும்ப பரிந்துரைத்துள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர்கள் பங்கேற்பது குறித்து முடிவு செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யர்களுக்கு எதிராக போட்டியிட வேண்டியிருந்தால், 2024 விளையாட்டுகளுக்கான தகுதிப் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது. இந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் விமர்சித்திருந்தது.
கொல்லப்பட்ட உக்ரைனிய விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை, எத்தனை விளையாட்டு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை தங்கள் தரப்பில் சரிபார்த்து உறுதி செய்ய முடியவில்லை என ராய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து, உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தானாக முன்வந்து ஆயுதம் ஏந்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Athlete, Russia - Ukraine