மனதுக்கு பிடித்த நபர்களுக்காக பல ரிஸ்க்கான காரியங்களை செய்வதை பெரும்பாலும் யாரும் கஷ்டமாக பார்க்கமாட்டார்கள். ஆனால், அந்த ரிஸ்க் சில வேளைகளில் நமக்கே வம்பாக வந்து விடும். அப்படித்தான் அமெரிக்காவில் ஒரு இளைஞர் தனது காதலிக்காக ரிஸ்க் எடுத்து சிக்கலில் மாட்டியுள்ளார். அந்நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஜேவான் பெய்ரி ஜாக்சன்.
இவர் ஒரு பெண்ணை காதலித்து வரும் நிலையில், அந்த பெண்ணுக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி tacho bell என்ற நிறுவனத்தில் வேலைக்கான இன்டர்வியூ இருந்துள்ளது. ஜாக்சன் தனது காதலியை இன்டர்வியூ இடத்திற்கு காரில் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், அன்றைய தினம் குறித்த நேரத்தை விட கிளம்ப தாமதமாகி விட்டதால் அதிவேகமாக சென்றுவிட ஜாக்சன் முடிவெடுத்தார். தொடர்ந்து தனது மெர்சிடஸ் காரில் வேக கட்டுப்பாட்டு விதிகளை மீறி அதிவேகமாக பறக்க ஆரம்பித்துள்ளார்.
பாம் ஸ்பிரிங் என்ற பகுதியில் இவர் பயணித்துள்ளார். அந்த இடத்தில் 64 கிமீ என்பது தான் அதிகபட்ச வேகக்கட்டுப்பாடு. ஆனால், இவரோ 160 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்று தனது காதலியை இன்டர்வியூவுக்கு கொண்டு சேர்த்துள்ளார். இவர் விதிகளை மீறி வேகமாக சென்றதை பாம் ஸ்பிரிங் பகுதி போலீசார் கவனித்துள்ளனர்.
இதையும் படிங்க: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் வரவில்லை.. அரிய நோயால் தவிக்கும் இளம் பெண்!
காரின் எண்ணை கொண்டு ஆவணங்களை திரட்டி, வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் உடனடியாக அதிரடி நடவடிக்கையாக இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளனர். அத்துடன் இவரை கைது செய்து பிரிவாட் கவுன்டி பகுதியில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இவர் ஏற்கனவே டிராபிக் விதிகளை மீறியுள்ளது தெரியவந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Interview, Job, Over speed, USA