முகப்பு /செய்தி /உலகம் / ரஷ்யா-உக்ரைன் போர் : 20,000 ரஷ்ய வீரர்கள் மரணம்.. அமெரிக்கா தகவல்..

ரஷ்யா-உக்ரைன் போர் : 20,000 ரஷ்ய வீரர்கள் மரணம்.. அமெரிக்கா தகவல்..

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா - உக்ரைன் போர்

ரஷ்யா- உக்ரைன் இடையே ஆன போர் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துகொண்டு இருக்கிறது.

  • Last Updated :
  • international, IndiaAmericaAmerica

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஆன போர் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துகொண்டு இருக்கும் நிலையில், 20,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் மரணமடைந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

உக்ரைனின் பாக்முத் நகரில் 5 மாதங்களுக்கு மேலாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த பகுதியில் களமிறக்கப்பட்ட ரஷ்யப் படைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கர்பி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தாக்குதலைத் தொடங்கியது. அதற்கு உக்ரைன் தக்க எதிர்த்தாக்குதலை நடத்தி களத்தில் நின்று கொண்டு இருக்கிறது. உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ரஷ்யா போதுமான பயிற்சியின்றி வீரர்களைச் சண்டைக்கு அனுப்பியதன் விளைவாக, கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்ததாகவும், அதில், 20,000 பேர் மரணமடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

Also Read : பழங்குடியினர் கொடுத்த பச்சை திரவம் - சாகச வீரர் அடைந்த மாற்றம் - சுவாரசிய சம்பவம்

top videos

    இது குறித்துப் பேசிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கர்பி, உக்ரைனுக்கு மேலும் ஒரு ஆயுத உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். தொடக்க முதலே அமெரிக்கா, உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், மீண்டும் ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    First published:

    Tags: Russia, Russia - Ukraine, US