TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு தேர்வாணையம், 2023 ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை (Annual Recruitment Planner) சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. TNPSC Group IV Exam: இந்த தேர்வு அட்டவணையில் , குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளியிடப்படும் என்றும் தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.   TNPSC Announcement: மேலும், குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை TNPSC Aspirants: லட்சக்கணக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இந்த தேர்வு திட்டம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது TNPSC Annual Planner Reactions: முதல் தலைமுறை பட்டதாரிகளை அதிகம் பாதிக்கப்படுவார்கள், மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். TNPSC Vacant Post: காலியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் மக்கள்நலத் திட்டங்களையும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும் என்றும் தெரிவித்தனர். TNPSC Updated Annual Planner : இந்நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. இதில், குரூப் 1 தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை. 2022ல் அறிவிக்கப்பட்டு, 2023ல் தேர்வு நடைபெறும் அரசுப் பணிகள் விவரம் TNPSC Examiantion : 2023ல் அறிவிக்கப்பட உள்ள துறை சார்ந்த தேர்வுகள்   TNPSC Group 1 Examination: குரூப் 1 பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதல்நிலைத் தேர்வு 2023, 23 நவம்பர் நடைபெறும் என்றும் , முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும். TNPSC Tentativle Calendar : இது உத்தேச அட்டவணை. அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் தேர்வர்கள் திட்டமிடுவதற்காக வெளியிடப்படுகிறது. பணி நியமனங்கள் பல்வேறு காரணங்களினால் அதிகரிக்கவோ, குறையவோ ஆகலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.