முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / ஒடிசா ரயிலில் இந்த தொழில்நுட்பம் இல்லையா? ’கவாச்’ குறித்து எழும் கேள்விகள்!

ஒடிசா ரயிலில் இந்த தொழில்நுட்பம் இல்லையா? ’கவாச்’ குறித்து எழும் கேள்விகள்!

சென்சார் அடிப்படையிலான இந்த தொழில்நுட்பம் அவசரகாலத்தில் பிரேக் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது டிரைவர் ரயிலை நிறுத்த முடியாமல் போனாலோ மோதுவதை தடுக்க தானாக நிற்கும் அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டது.

சென்சார் அடிப்படையிலான இந்த தொழில்நுட்பம் அவசரகாலத்தில் பிரேக் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது டிரைவர் ரயிலை நிறுத்த முடியாமல் போனாலோ மோதுவதை தடுக்க தானாக நிற்கும் அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டது.

சென்சார் அடிப்படையிலான இந்த தொழில்நுட்பம் அவசரகாலத்தில் பிரேக் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது டிரைவர் ரயிலை நிறுத்த முடியாமல் போனாலோ மோதுவதை தடுக்க தானாக நிற்கும் அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டது.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai |

ரயில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை அடுத்த பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூரு- ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,  மூன்று ரயில்கள் அடுத்துதடுத்து மோதி கோர விபத்துக்குள்ளானது. அதில் 261 நபர்கள் இறந்துவிட்டதாகவும் 900 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்த கோரவிபத்து காரணமாக பல்வேறு ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த  ரயில் விபத்து சம்பவம் பல ரயில் சார்ந்த தொழிநுட்ப விஷயங்களைக் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதில் ஒரு முக்கிய அம்சம் கேள்வி தான் "கவாச்" தொழில்நுட்பம்.

இந்த விபத்து நடந்ததற்கு ஒரே டிராக்கில் இரண்டு ரயில்கள் வந்தது காரணம் என்று புகார் எழுந்தது. கடந்த ஆண்டு இப்படி ஒரே தடத்தில் வரும் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கவாச் என்று  தனியங்கி தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது. இது பல இந்திய ரயில்களில் பொருத்தும் ஆணையும் விடுக்கப்பட்டது.

அது சரியாக செயல்படுத்தப்பட வில்லையா? விபத்துக்களுள்ளான கோரமண்டல் ரயிலில் கவாச் சிஸ்டம் இருந்ததா? இல்லை இந்த பகுதி ரயில்வே இந்த  தொழில்நுட்பத்தின் மீது  ஆர்வம் காட்டவில்லையா?  என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

கவாச் வரலாறு:  ஜனவரி 13, 2022 அன்று, மைனாகுரியில் உள்ள டோம்ஹானியில் அப்பிகானர்-கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அன்று மட்டும்  மொத்தம் 8 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் இது போன்ற ரயில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்தை ரயில்வே அமைப்பு உருவாக்கத் தொடங்குவது.

அதன்படி  ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பு RDSO உள்நாட்டு பொருட்களைக் கொண்டு  உள்நாட்டிலேயே தயாரித்த தொழில்நுட்பமாகும்.  கவாச் (Kavach) என்பது ஒரு தானியங்கி ரயில் பாதுகாப்பு  சிஸ்டம் ஆகும். எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ரேடியோ அதிர்வெண் சாதனங்களின் தொகுப்பாகும் . இது ரயில் இன்ஜின்கள், சிக்னலிங் சிஸ்டம் மற்றும் டிராக்குகளில் நிறுவப்படும்.

இது ரயில்களின் பிரேக்குகளைக் கட்டுப்படுத்தவும் , ஓட்டுனர்களை எச்சரிக்கவும் அல்ட்ரா ஹை ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தி ஒன்றோடு ஒன்று சைனல்களை பகிர்ந்துகொள்ளும். இது கடந்த ஆண்டு செகந்திராபாத்  ரயில் நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது மட்டும் இல்லாமல், தெற்கு மத்திய ரயில்வேயின்  குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே மற்றொரு பரிசோதனைக்கும் உள்ளானது.

அப்போது இரண்டு ரயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற செயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பே இரண்டு என்ஜின்களை நிறுத்தியது.

சென்சார் அடிப்படையிலான இந்த தொழில்நுட்பம் அவசரகாலத்தில் பிரேக் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது டிரைவர் ரயிலை நிறுத்த முடியாமல் போனாலோ மோதுவதை தடுக்க தானாக நிற்கும் அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டது. அதே போல் சோதனையின்போது, சிவப்பு  விளக்கு வரும்போது ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : நாட்டையே உலுக்கிய கடந்த கால ரயில் விபத்துகள்... வரலாற்றின் கருப்பு பக்கங்கள்

இணைப்புப் பாதைகள் வரும்போது ரயிலின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைத்துள்ளது. சோதனைகள் முடிந்து  2022-23-இல் 2,000 கி.மீ. ரயில் பாதை கவாச் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று அப்போது ரயில்வே அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

விபத்து தடுக்கப்பட்டிருக்குமா? 

ஆனால், கரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த கருவி பொருத்தப்படவில்லை என்பது விபத்தினால் தெரியவந்துள்ளது. அதே நேரம் ஒரு வேலை கவாச் இருந்து சரியாக செயல்படவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மற்றொருபுறம் ஒருவேளை கவாச் சிஸ்டம் சரியாக செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ரயில்களில் இருந்திருந்தால் ரயில் விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமோ என்ற வினாவும் உலா வருகிறது.

ஆனால் இப்போது பயன்படுத்தப்படும் கவாச் கருவி எதிர் எதிர் ரயில் வரும் நிலைகளில் தான் தானாக நிற்கும். தண்டவாளத்தில் தடம் புரண்ட பெட்டிகளை அதனால் அடையாளம் கண்டு பிடித்து நிறுத்த முடியாது என்ற விளக்கங்களும் வந்துகொண்டு இருக்கின்றன.

First published:

Tags: Indian Railways, Odisha, Train Accident