முகப்பு /செய்தி /ஈரோடு / 3 நாடுகள், 6 நாட்கள்... பிரதமர் மோடி வெளிநாடு பயணம் - முழு விவரம்..!

3 நாடுகள், 6 நாட்கள்... பிரதமர் மோடி வெளிநாடு பயணம் - முழு விவரம்..!

பிரதமர்

பிரதமர்

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

  • Last Updated :
  • Delhi, India

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை ஆறு நாட்கள், மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல் கட்டமாக ஜப்பானில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர், உலக அமைதி, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு, உரம் மற்றும் எரிசக்தி ஆற்றல் உள்ளிட்டவை குறித்து உரையாற்றுகிறார். மேலும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசுகிறார்.

பின்னர், 22 ஆம் தேதி பப்புவா நியூ கினியா செல்லும் மோடி, அங்கு நடைபெறும் இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசுகிறார். இதன் மூலம் பப்புவா நியூ கினியாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

இதையும் படிங்க; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது... இந்த லிங்கில் செக் செய்துகொள்ளலாம்...!

அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் உரை நிகழ்துகிறார். மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் 20-க்கும் மேற்பட்ட உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

First published:

Tags: PM Modi