முகப்பு /ஈரோடு /

நாட்டாமை படத்தில் சரத்குமார் தீர்ப்பு சொன்ன இடம் இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?

நாட்டாமை படத்தில் சரத்குமார் தீர்ப்பு சொன்ன இடம் இதுதான்! எங்க இருக்கு தெரியுமா?

X
ஈரோடு

ஈரோடு படப்பிடிப்பு பகுதி

Erode News : நாட்டாமை படத்தில் சரத்குமார் தீர்ப்பு சொன்ன இடம் ஈரோடு மாவட்டத்தில்தான் உள்ளது. இந்த இடம் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வோம்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாட்டத்தில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் கோபிச்செட்டிபாளையம் அமைந்துள்ளது. இந்த கோபிச்செட்டிபாளையத்தை சின்னக் கோடம்பாக்கம் என செல்லமாக அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் சினிமா படங்களால் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இங்குள்ள வள்ளியாம் பாளையம் கிராமத்தில் மூலக்கரை கரிவரதராஜ பெருமாள் கோவில் தான் இந்த சிறப்புகளுக்க முக்கிய காரணம். இங்கு தான் தொண்ணூறுகளில் வெளிவந்து தமிழ் திரை உலகில் தனித்த இடம் பிடித்த ‘நாட்டாமை’ படத்தில் சரத்குமார் தீர்ப்பு சொல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இயற்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ள, குன்றைப்போல அமைப்பைக்கொண்ட பாறையில் இந்தக் கோவிலானது அமைந்துள்ளது. இங்கு பழமையான சிற்பங்களையும், பாறையில் வெட்டப்பட்ட அனுமனின் சிற்பத்தையும் காணலாம்.

கண்ணிற்கு எட்டிய தூரம் வரை, இயற்க்கை எழில் கொட்டிக்கிடக்கும் இந்தக் கோவிலில் சிறப்பான நாட்களில் மட்டும் பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Erode, Local News, Shootin spot