முகப்பு /செய்தி /ஈரோடு / சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்... அடுத்த முதல்வர் யார்? - காங்கிரஸில் வெடித்தது கோஷ்டி பூசல்..!

சித்தராமையா Vs டி.கே.சிவக்குமார்... அடுத்த முதல்வர் யார்? - காங்கிரஸில் வெடித்தது கோஷ்டி பூசல்..!

சித்தராமையா - சிவக்குமார்

சித்தராமையா - சிவக்குமார்

arnataka assembly election results 2023 | கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பார் என அவரது மகன் யதீந்திரா கூறியதற்கு டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 122 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் முன்னிலையில் இருக்கும்போதே அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதங்களும் சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. முதல்வருக்கான போட்டியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பார் என அவரது மகன் யதீந்திரா செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க; LIVE AUTO REFRESH ON கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023 நேரலை : காங். 18 ; பாஜக 6 ; மஜத 1-ல் வெற்றி

top videos

    முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டோம் என அறிவித்துள்ள டி.கே.சிவக்குமார் தரப்பு, சித்தராமையா மற்றும் தினேஷ் குண்டுராவ் பதவி விலகிய பின்னர் கர்நாடகாவில் காங்கிரஸை கட்டமைத்தவர் டி.கே.சிவக்குமார். சோனியா மற்றும் கார்கேவின் முழு ஆதரவு அவருக்கு இருக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் கர்நாடக காங்கிரஸில் இப்போதே சலசலப்புகள் எழுந்துள்ளன.

    First published:

    Tags: Congress, Karnataka Election 2023