முகப்பு /ஈரோடு /

என்னது இந்த நதி கண்ணுக்கு தெரியாதா? - அதுவும் நம்ம ஈரோட்டில் உள்ளதா..!

என்னது இந்த நதி கண்ணுக்கு தெரியாதா? - அதுவும் நம்ம ஈரோட்டில் உள்ளதா..!

X
இந்த

இந்த நதி கண்ணுக்கு தெரியாது?

Invisible River Temple in Erode | ஈரோடு மாவட்டம் பவானியில் இந்த நதி அமைந்துள்ளது.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி, பவானியில் கலக்கும் கண்ணுக்கு தெரியாத நதி பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

சிற்பக்கலைகளின் சிறப்புடன் தேவாரத்தில் பாடப்பெற்ற மருத்துவலிங்கமும், மருத்துவ நாயகியும் முக்கூடலில் தென்திரிவேணி சங்கமம் நம்ம ஈரோடு மாவட்டம் பவானியில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு லிங்கமாக மருத்துவ லிங்கத்துடன் மருத்துவ நாயகி அம்மனும் இருப்பது சிறப்பு.

கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோயிலின் கோபுரத்தின் உள்ளே நுழையும் போதே பாண்டியர்களுடைய மீன் சின்னங்கள் ஆங்காங்கு கோவிலின் சுவற்றில் காணப்படுகிறது. தினமும் வந்து வணங்குபவர்களுக்கு கூட தெரியாத சுவாரசியம் நிறைந்த விஷயங்கள் இந்த கோயிலில் நிறைய உள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பவானியில் அமைந்துள்ளது சங்கமேசுவரர் கோயில். பவானி நகரின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த கோயில் தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய 3 நிலையிலும் சிறப்புடைய தலமாக இருந்து வருகிறது. தலம் என்பது இக்கோயிலின் பிரதானமான மரமான இலந்தை மரத்தை குறிக்கும்.

இதையும் படிங்க : மீண்டும் ஒரு கீழடி கண்டுபிடிப்பு..! பொற்பனைக்கோட்டையில் அகழ்வாய்ராய்ச்சி பணிகள் தொடக்கம்..!

தீர்த்தம் என்பது இங்கு சங்கமிக்க கூடிய காவிரி, அமிர்த நதி, பவானி நதியை குறிக்கும். பொதுவாகவே 3 நதிகள் சங்கமிக்க கூடிய இடத்தை திரிவேணி சங்கமம் என போற்றுவர். அந்த விதத்தில் இது தென் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. பவானியும், காவிரியும் கண்ணால் பார்க்க கூடிய நதிகளாகவும் அமிர்த நதியை பார்க்க முடியாது எனவும் இங்குள்ள மக்கள் கூறுவது வியப்பாக இருக்கிறது. இக்கோவிலின் சுயம்பு மூலவர்தான் மருத்துவ லிங்கம்.

திரிவேணி சங்கமம்

மூர்த்தம் என்றால் மூலவர் சுயம்பு லிங்கமாக அமையப்பெற்றதாகும். 5 மலைகள் சூழ்ந்த மையத்தில். அமைந்துள்ளது இத்கோயிலுக்கு கூடுதல் சிறப்பாக அமைகிறது. வடக்கில் வேதகிரியும், தெற்கில் மங்கள கிரியும், வடகிழக்கில் சங்ககிரியும், கிழக்கில் நாக கிரியும், காவிரியில் பத்மகிரியும் ஆகும். இது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் ஆகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    திருமுறையில் திருநணா என்று போற்றப்படுகிறது. திருநணா என்றால் தீங்குகள் நன்னாது திருவருள் நல்கும் என்பது பொருள். வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக மருத்துவ நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. கோயிலின் நடைதிறந்திருக்கும் நேரம் காலை 05:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை. அதேபோல் மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை ஆகும்.

    First published:

    Tags: Erode, Local News