முகப்பு /செய்தி /ஈரோடு / “ஆளுநரின் செயலருக்கு 7 முறை கடிதம்...” - சித்தா பல்கலைக்கழக மசோதா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

“ஆளுநரின் செயலருக்கு 7 முறை கடிதம்...” - சித்தா பல்கலைக்கழக மசோதா குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

செய்தியாளர் சந்திப்பில் மா.சுப்பிரமணியன்

செய்தியாளர் சந்திப்பில் மா.சுப்பிரமணியன்

பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு எதிரான கருத்துகள் சித்த மருத்துவ மசோதாவில் இடம்பெறவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Erode, India

புற்றுநோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்கப்பட்டு, பாதிப்புகளை குறைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கை கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  “உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி, 24 சதவீத நோய்த் தொற்று கை கழுவாததால் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. நல்ல முறையில் கை சுகாதாரம் பாதுகாத்து வந்தால் 70 சதவீத உயிர் பாதிப்புகளை தடுக்க முடியும்.

ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு, ராணிபேட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். தமிழத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் சுகாதார வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  “பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு எதிரான கருத்துகள் சித்த மருத்துவ சட்ட மசோதாவில் இடம்பெறவில்லை.  ஏற்கனவே குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றபட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ஆளுநரின் செயலருக்கு 7 முறை கடிதம் அனுப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பவர்தான் வேந்தராக உள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைகழங்களை அரசுதான் நிர்வாகித்து வருகிறது. அந்த வகையில் முதல்வரை வேந்தராக நியமிக்கப்படுவார். 2013 லேயே தமிழ்நாடு இசைப் பல்கலைகழக வேந்தராக முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

top videos

    செய்தியாளர்: பாபு

    First published:

    Tags: Erode, Ma subramanian