முகப்பு /ஈரோடு /

என்னது நம்ம ஈரோட்டில் உள்ள விவசாய நிலத்துல கங்கை தீர்த்தமா? குளித்தால் பாவம் விலகும் என ஐதீகம்!

என்னது நம்ம ஈரோட்டில் உள்ள விவசாய நிலத்துல கங்கை தீர்த்தமா? குளித்தால் பாவம் விலகும் என ஐதீகம்!

X
ஈரோடு

ஈரோடு கங்கை தீர்த்தம்

Erode Ganga water | இந்த நீரில் குளித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி சிவனை அடையலாம் என்பதும் இங்குள்ள மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

அடிக்கற வெயிலுக்கு குடும்பத்தோட சென்று வர அட்டகாசமான ஒரு இடத்தை பாக்கப்போறோம். இது சுற்றுலாத்தளம் மட்டும் இல்லைங்க பல அதிசயங்களை உள்ளடக்கிய ஆன்மீக தளமாகவும் இருந்துவருகிறது.

மத்தாளக்கோம்பு பகுதிக்கு செல்லும் வழித்தடம் இரம்மியமானது இயற்கையையும் மனிதனையும் இணைக்கும் காட்சிகளை இங்கு பார்க்கலாம்…ஏரிக்கரை ,ஒத்தை அடிப்பாதை, வயல்,ஆறு,என இயற்க்கை காட்சிகளுக்கு இங்கு பஞ்சமேயில்லை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து பவானி செல்லும் சாலையில் தூக்கநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள மத்தாளக்கோம்பு ஊருதான்ங்க அது.

இங்கு உள்ள விவசாய நிலத்தில் இயற்க்கையாகவே இடிவிழுந்ததால் உருவான குளற்றில் வற்றாமல் ஊற்றெடுத்துக்கொண்டிருக்கும் புனித நீரைத்தான் கங்கைதீர்த்தமாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இங்கு நுழைந்ததும் மத்தாளக்கோம்பு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது ,பொதுவாகவே பிள்ளையாருக்கு மூசிகன் தான் வாகனம் ஆனால் இந்தக் கோவிலில் வாகனம் பிள்ளையாருக்கு எதிரே நந்தி உள்ளது அது ஆச்சர்யமான ஆன ஒன்று. இங்கு சிவனின் உருவம் வெட்டப்பட்ட நாகர் சிலைகள் மூலவரான பிள்ளையாரை சுற்றி இருப்பது இன்னும் வியப்பூட்டுகிறது.

தமிழர்களின் வானியல் அறிவைப்போற்றும் விதமாக நவகிரகங்களும் இங்கு அமைந்துள்ளது இன்னும் கூடுதல் சிறப்பு. மத்தாளக்கோம்பு கங்கை தீர்த்தம் கூட இந்த திருக்கோவிலுக்கு சொந்தமானது தான். கோவிலின் எதிரே அமந்துள்ள கரும்புபயிர்களுக்கிடையே தான் இந்தக் குளம் அமைந்துள்ளது.

பார்க்கும்போதே பரவசமூட்டும் பளிச்சென்று ஊற்றெடுக்கும் நீர், இந்த பகுதி மக்களால் கங்கைதீர்த்தம் , அக்னி தீர்த்தம் என்றெல்லாம் போற்றப்படும் இங்கு ஆண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் ,சிலர் வேண்டும் என்றே குளத்தின் புனித்த்தன்மையை கெடுக்கும் விதமாக நடந்துகொள்வதால் தற்போது பாதுகாப்பு வளையம் போடப்பட்டு,குளத்தின் உபரி நீர் வெளியேறும் தொட்டியில் குளிக்க அனுமதியுள்ளதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இந்த நீரில் குளித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி சிவனை அடையலாம் என்பதும் இங்குள்ள மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Erode, Ganga, Local News