முகப்பு /செய்தி /ஈரோடு / கிணற்றில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி.. காதலனை கைது செய்த போலீசார்.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!

கிணற்றில் சடலமாக கிடந்த கல்லூரி மாணவி.. காதலனை கைது செய்த போலீசார்.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி

கோபிச்செட்டிபாளையம் அருகே கிணற்றில் இருந்து கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சாக்குப் பையில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சடலம் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்வேதா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஸ்வேதாவின் காதலன் லோகேஷ்-ஐ கைது செய்தனர்.

கோபி கலை அறிவியல் கல்லூரி படித்த இருவரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பமடைந்த ஸ்வேதாவுக்கு கருக்கலைப்பு செய்யக் கோவைக்கு லோகேஷ் அழைத்துச் சென்றதாகவும், அங்குக் கருவை கலைக்க மருத்துவர்கள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இருவரும், கொங்கர்பாளையத்தில் உள்ள லோகேஷின் பாட்டி வீட்டிற்குச் சென்றனர். அங்கு கருவைக் கலைப்பது தொடர்பாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாலும் லோகேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Also Read : வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ஊற்றிய பெண்..!

இதனால், ஸ்வேதா தற்கொலை செய்து கொண்ட நிலையில், உடலை சாக்குப்பட்டியில் கட்டிய லோகேஷ், இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கிணற்றில் வீசியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. லோகேஷ் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

top videos
    First published:

    Tags: Crime News, Dead body, Erode