முகப்பு /செய்தி /ஈரோடு / கர்ப்பமான காதலி.. கைவிரித்த காதலன் - இளம்பெண் மரணத்தில் வெளியான பகீர் தகவல்

கர்ப்பமான காதலி.. கைவிரித்த காதலன் - இளம்பெண் மரணத்தில் வெளியான பகீர் தகவல்

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

Erode murder | திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதலியின் சடலத்தை கட்டி கிணற்றில் வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Gobichettipalayam, India

கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்கும் போது கருத்தரித்த கல்லூரி மாணவி, காதலன் திருமணம் செய்ய ஒத்துழைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள  கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டுமாரியம்மன் கோவில் அருகிலுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூட்டையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் கோபி கண்ணகி வீதி நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த ஸ்வேதா(21)  என்பது தெரியவந்தது. கடந்த 28-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் கோபிகாவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கில் கட்டி கிணற்றில் வீசியது யார் என்பது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்வேதா, கல்லூரியில் உடன் படித்து வந்த லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததில் ஸ்வேதா கருத்தரித்துள்ளார். இதனால் லோகேஷ் கருவை கலைப்பதற்காக ஸ்வேதாவை அழைத்து கொண்டு கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் கருவை கலைக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் லோகேஷின் பாட்டி வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஸ்வேதா லோகேஷை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா லோகேஷ் கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், யாருக்கும் தெரியக்கூடாது என நினைத்து ஸ்வேதாவின் கை, கால்களை கட்டி சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் லோகேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

top videos

    செய்தியாளர்: தினேஷ், ஈரோடு.

    First published:

    Tags: Crime News, Erode, Gobichettipalayam Constituency, Murder, Suicide