முகப்பு /ஈரோடு /

இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?

இரவில் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் நடக்கும் ஈரோடு ஜவுளி சந்தை பற்றி தெரியுமா?

X
ஈரோடு

ஈரோடு - இரவு ஜவுளி சந்தை

Erode Night Textile Market : மஞ்சள் விவசாயத்திற்கும், ஏற்றுமதிக்கும் சிறந்த ஊராக இருக்கும் ஈரோடு, ஜவுளி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் ஆசிய அளவில் பெயர் பெற்ற ஊராக இருந்து வருகிறது .

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து காளை மாட்டு சிலை செல்லும் வழியில் ஜவுளிக்கடல் போல் அதாவது ஆடைகளுக்கான வாரச்சந்தை அமைந்துள்ளது. வாரம் ஒரு முறையான திங்கள் கிழமை இரவு மட்டும் தான் பார்க்கமுடியும் இந்த சந்தை.

உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை நிலையமாக இந்த இடம் இருப்பதனால் ஆடைகள் தரம் நிறைவாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்.

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய சிறு, குறு வியாபாரிகள் அதிக அளவில் இந்த சந்தையின் மூலம் அதிகப்படியான நன்மை அடைவதாக இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஈரோடு - இரவு ஜவுளி சந்தை

இரவு நேர சந்தை என்றாலும் கூட, போக்குவரத்து வசதி இரவு முழுவதும் சிறப்பாகவே மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமையப்பெற்ற சந்தை என இங்குள்ள வாடிக்கையாளர்களும் விற்பனையாளர்களும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : விருதுநகரில் ஓர் கீழடி..! மண்ணில் புதைந்திருக்கும் சங்ககால வடி குழாய்.. அழியாமல் காக்கப்படுமா?

மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Erode, Local News