முகப்பு /ஈரோடு /

மாலையில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா.. ஈரோட்டில் இப்படி ஒரு சிறப்புமிக்க கோவிலா..!

மாலையில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா.. ஈரோட்டில் இப்படி ஒரு சிறப்புமிக்க கோவிலா..!

X
மாலையில்

மாலையில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா

Erode Pon Arachalai Amman Temple : ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் வழியில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொன் அறச்சாலை அம்மன் கோவில். இதன் சிறப்புகளை தெரிந்துகொள்வோம்.

  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மக்களால் பகை வெட்டும் பத்திரகாளி என்று அழைக்கப்படும் பொன் அறச்சாலை அம்மன் கோவில் ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் வழியில் சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது கூடுதல் சிறப்பு.

சித்திரை மாதத்தில், பதினைந்து நாள் பூச்சாட்டுதலோடு தொடங்கி நெரமனை எடுத்தல், குண்டம் இறங்குதல், கிடா வெட்டு, தேரோட்டம் என, இந்த திருவிழாவின் நிறைவாக முடிவடையும்னு சொல்றாங்க அங்குள்ள மக்கள். கோவில் குண்டம் திருவிழா என்றாலே அதிகாலையில் பெரும்பாலும் குண்டம் இறங்கும் நிகழ்வு நடக்கும். அது தான் வழக்கம். சில இடங்களில் மாலையிலும் நடக்கும்.

மாலையில் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா

அன்னம் கொடை என்று, கொடுத்து, கொடையளித்த அறச்சாலையூர் என்னும் பூந்துறை நாடு என்று, பேரெடுத்த அறச்சலூரில்தான் இந்த திருவிழா நடக்கிறது. அறச்சாலையூர், இப்போது, அறச்சலூர் என்று பேச்சு வழக்கில் மாறியதாக கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த ஊரில் முடிசூடா ராணியாக ஆளும் பெண் தெய்வமாக கோவில் கொண்டுள்ள அன்பைக்கூட பொன்னைப்போல அள்ளிக்கொடுக்கும் பொன் அறச்சாலை அம்மன் குண்டம் திருவிழா, மாலை நேரத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த குண்டம் திருவிழா நம்ம ஈரோட்டில், வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

First published:

Tags: Erode, Local News